55 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் வேலூர் சரக டிஐஜி காமினி உத்தரவு
February 27, 2021
Naren Dran
வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பணியாற்றும் 55 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட 55 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி காமினிஉத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் தெற்கு ஆய்வாளர் லதா,திமிரிக்கும், வேலூர் கிராமிய ஆய்வாளர் கருணாகரன், சத்துவாச்சாரிக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றிவந்த புனிதா, அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் பாலசுப்பிரமணியன் தேசூருக்கும், லத்தேரி கோவிந்தசாமி போளூருக்கும், குடியாத்தம் கிராமிய ஆய்வாளர் பார்த்தசாரதி தி.மலை நகரத்துக்கும், வேலூர்மகளிர் ஆய்வாளர் நிர்மலா உமராபாத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். குடியாத்தம் மகளிர் ஷியாமளா கீழ்பென்னாத்தூருக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு நாகராஜன், திருவண்ணாமலை குற்றப்பிரிவுக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர்சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், வேலூர் பணியிடை பயிற்சி மைய ஆய்...