Subscribe to Newsletter

phonesdns - Mobile Phone Repair Daily New Solutions

Ranipet
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே சரக்கு லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்பு கட்டுகள் - போக்குவரத்து கடும் பாதிப்பு

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே சரக்கு லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்பு கட்டுகள் - போக்குவரத்து கடும் பாதிப்பு

February 28, 2021 Naren Dran
  ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரியிலிருந்து கரும்புகள் கட்டுக்கட்டாக சாலையில் விழுந்து விபத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி கரும்புகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, ராணிப்பேட்டை இராஜேஸ்வரி திரையரங்கம் கடந்து வந்த போது எதிர்பாராத விதமாக லாரியில் அதிக அளவில் கட்டப்பட்டிருந்த கரும்புகள் சரிந்து சாலையில் கொட்டியது. பாதை முழுவதும் சிதரியதை அடுத்து  போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் லாரியில் இருந்து கொட்டப்பட்ட கரும்புகளை மீண்டும் ஏற்றும் பணி  நடைபெற்றது.
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே சரக்கு லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்பு கட்டுகள் - போக்குவரத்து கடும் பாதிப்பு

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே சரக்கு லாரியில் இருந்து சாலையில் விழுந்த கரும்பு கட்டுகள் - போக்குவரத்து கடும் பாதிப்பு

February 28, 2021 Naren Dran
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரியிலிருந்து கரும்புகள் கட்டுக்கட்டாக சாலையில் விழுந்து விபத்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி கரும்புகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, ராணிப்பேட்டை இராஜேஸ்வரி திரையரங்கம் கடந்து வந்த போது எதிர்பாராத விதமாக லாரியில் அதிக அளவில் கட்டப்பட்டிருந்த கரும்புகள் சரிந்து சாலையில் கொட்டியது. பாதை முழுவதும் சிதரியதை அடுத்து  போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் லாரியில் இருந்து கொட்டப்பட்ட கரும்புகளை மீண்டும் ஏற்றும் பணி  நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

February 27, 2021 Naren Dran
     வேலைவாய்ப்புதமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை (TNAHD-Tamilnadu Animal Husbandry Department) மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: இராணிபேட்டை, தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை: Office Assistant, Driver கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.ranipet .nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். முகவரி – Assistant Director, Tamil Nadu Animal Husbandry Department Veterinary Hospital Campus Ranipet – 632 401 மேலும் முழு விவ...
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி ராணிப்பேட்டையில் இன்று கள் இறக்கும் போராட்டம்

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி ராணிப்பேட்டையில் இன்று கள் இறக்கும் போராட்டம்

February 27, 2021 Naren Dran
தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, ராணிப்பேட்டைமாவட்டம், பொன்னம்பலத்தில் இன்று கள்இறக்கும் போராட்டம் நடக்கிறது. இதன்தொடர்ச்சியாக கள் இறக்குவதற்கு அனுமதிகோரி மார்ச் 13-ம் தேதி ஈரோட்டில்கள் விடுதலை மாநாடு நடக்கிறது. தமிழகத்தில் கள் இறக்குதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கள் இறக்குவதும், பருகுவதும் இந்தியஅரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும்உரிமை என்று கூறும் இந்த அமைப்பினர், கள் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என நிரூபிப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில், இன்று (27-ம் தேதி) காலை 10 மணிக்கு கள் இறக்கும் போராட்டமும், மார்ச் 13-ம் தேதி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹால் மற்றும் குருசாமிக் கவுண்டர் மண்டபத்தில், கள் விடுதலை மாநாடும் நடக்கவ...
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1½ கோடி - 48 நாளில் கிடைத்தது

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1½ கோடி - 48 நாளில் கிடைத்தது

February 25, 2021 Naren Dran
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 48 நாட்களுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையரும் செயல் அலுவலருமான பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் உதவி ஆணையர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 600 கிடைத்தது. மேலும் 1 கிலோ 242 கிராம் தங்கம், 7 கிலோ 720 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்புபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்புபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

February 25, 2021 Naren Dran
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited) மொத்த காலியிடங்கள்: 158 வேலை செய்யும் இடம்: ராணிப்பேட்டை – தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Fitter, Welder கல்வித்தகுதி: 8,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60211316f6f9d745af3f2429 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021
நெமிலி அருகே பழமைவாய்ந்த மணிகண்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நெமிலி அருகே பழமைவாய்ந்த மணிகண்டீஸ்வரர் கோயில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

February 24, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூரில் அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. மணலால் சிவலிங்கம் செய்து பார்வதி வணங்கியதும், போரில் வெற்றி பெற சிவலிங்கத்தை, திருமால் வணங்கிய வரலாற்று சிறப்பு கொண்ட இந்த கோயில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இக்கோயிலில் மாசிமக பிரமோற்சவம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராணிப்பேட்டையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்

ராணிப்பேட்டையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்

February 24, 2021 Naren Dran
ராணிப்பேட்டையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி வாலாஜா தாலுகா செட்டிதாங்கல் கிராமம் லாலாபேட்டை தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார்.  இவரது மனைவி பவித்ரா (39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் இன்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.  இதை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ரமேஷ் தனது மீதும், குடும்பத்தினர் மீதும் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.  போலி ஆவணங்கள் தயாரிப்பு இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றி அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் 3 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து, தனது நிலத்தை அவர்களுடைய நிலம் என்று கூறி தகராறு செய்தனர். இதுகுறித்து அரக்கோணம் பதிவாள...
பொதுமக்கள் பிரச்னைகளை வாட்ஸ்அப் , செல்போனில் தெரிவிக்கலாம் ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் பெட்டி

பொதுமக்கள் பிரச்னைகளை வாட்ஸ்அப் , செல்போனில் தெரிவிக்கலாம் ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் பெட்டி

February 23, 2021 Naren Dran
பொது மக்கள் தங்களது பிரச்னைகளை வாட்ஸ் அப் , செல்போன் மூலம் தகவல் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் தெரிவித்தார். அரக்கோணத்தில் உள்ள டிஎஸ்பி அலு வலகத்திற்கு ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார் நேற்று முன்தினம் திடீரென வந்து ஆய்வு செய்தார். அவரை டிஎஸ்பி மனோகரன் வரவேற்றார்.  இதையடுத்து எஸ்பி , அரக்கோணம் சப் . டிவிஷனில் உள்ள காவல் நிலையங்கள் குறித்தும் , நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார் . மேலும் , வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக் கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார் . பின்னர் , அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள், தங்களது பிரச்னைகளை தெரிவிக்க எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். மேலும் 9842126150 என்ற செல்போன் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம் . அதே போல் வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம் . பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் ரோந்து அதிகரிக்கப்படும் . ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கப்படும் . கள்ளச்சார...
காவேரிப்பாக்கம் - சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி

காவேரிப்பாக்கம் - சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி

February 22, 2021 Naren Dran
ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் முதல் சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது.   ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருபார்கடல் பாலாற்றின் பகுதியில் இருந்து திருவள்ளுர் மாவட்டம் திருத்தணிகைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் பைப் லைன் அமைக்கப்பட்டது. இதனால் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப்பனிகல் நிறுத்தப்பட்டு இருந்தது பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் காவேரிப்பாக்கம் முதல் சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மற்றும் 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்

ராணிப்பேட்டை மற்றும் 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்

February 21, 2021 Naren Dran
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கடலூரிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுவையிலும் கடலூரிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சொல்லியுள்ளார்கள். அதேபோல அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் முல்லை டீச்சர்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் முல்லை டீச்சர்!

February 21, 2021 Naren Dran
சேவை என்று சொல்லப்பட்டவை எல்லாம் கடமைக்காகச் செய்யப்படுபவையாகச் சுருங்கிப்போனபோதும், அரிதாகச் சில நிகழ்வுகள் நம் நம்பிக்கையை மீட்டுத்தந்துவிடுகின்றன. குடியரசு நாளன்று தமிழக முதல்வரிடமிருந்து வீரதீரச் செயலுக்கான விருதைப் பெற்றவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். பள்ளி ஆசிரியர் அப்படி எதைச் சாதித்தார் என்கிற கேள்விக்குப் பதிலாகத் தன் உயிரையே பணயமாக வைத்தவர் அவர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிவருபவர் முல்லை. அப்பா, பாண்டுரங்கன் தமிழாசிரியர், அம்மா மாணிக்கம் இல்லத்தரசி. அப்பாவின் வழியில் அந்த வீட்டின் மூன்று பெண்களும் ஓர் ஆணும் ஆசிரியப் பணியையே தேர்ந்தெடுத்தனர். முல்லையின் புகுந்த வீடும் ஆசிரியப் பின்புலம் கொண்டதுதான். மாமனார், மாமியார் இருவருமே ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். எல்லா நாளையும்போலத்தான் 2020 ஜனவரி 29ஆம் தேதியும் முல்லைக்கு விடிந்தது. அரசுப் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் பள்ளிப் பரிமாற்ற நிகழ்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் இருந்தார் முல்லை. அதாவது இவர்களது பள்ளி மாணவர்கள் வேறொரு பள்ளிக்குச் சென்று ...
காவேரிப்பாக்கம் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய மாணவன் கழுத்து இறுகி பலி

காவேரிப்பாக்கம் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய மாணவன் கழுத்து இறுகி பலி

February 21, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமம் மீனவர் தெரு சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் கோபிகிருஷ்ணா (வயது 12). காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சேைலயில் கழுத்து இறுகி மயங்கி விழுந்தான்.  அதை பார்த்த பெற்றோர் கோபிகிருஷ்ணாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து கோபிகிருஷ்ணா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு ரோந்துப்பணி முடுக்கி விடப்படும் புதிய எஸ்பி பேட்டி

இரவு ரோந்துப்பணி முடுக்கி விடப்படும் புதிய எஸ்பி பேட்டி

February 20, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்ட எஸ் பியாக இருந்த மயில்வாகனன் கோவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் . அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சிவக்குமார் நியமிக்கப்பட்டார் . தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மாலை எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் .  அவருக்கு டிஎஸ்பி பூரணி , இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் . தொடர்ந்து புதிய எஸ்பி சிவக் குமார் நிருபர்களிடம் கூறுகையில் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலின்போது , எந்தவித அசம்பாவிதமும் , குற்றச் செயல்களும் ஈடுபடாத வகையில் விழிப்புடன் செயல்படுவது முதல் பணி .  ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் , ஒழுங்கு , போக்குவரத்து , பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் . சாராயத்தை ஒழிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடுவேன் . குற்றச்செயல்களை தடுக்க போலீசாரின் இரவு ரோந்து பணி முடுக்கி விடப்படும் . என்றார் . முன்னதாக எஸ்பி சிவக்குமாரை , மயில்வாகனன் வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார் .
தலைமைக் காவலரை டிராக்டா் ஏற்றி கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள்

தலைமைக் காவலரை டிராக்டா் ஏற்றி கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள்

February 19, 2021 Naren Dran
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் காவல் நிலைய தலைமைக் காவலா் கனகராஜ் (41), காவலா் ராஜன். இருவரும் கடந்த 20.07.2014 அன்று கல்லாறு ஆற்றில் மணல் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (31) கல்லாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தாா். அவரை தலைமைக் காவலா் கனகராஜ், காவலா் ராஜன் ஆகியோா் நிறுத்தி விசாரித்தனா். அப்போது சுரேஷ் திடீரென டிராக்டரை வேகமாக இயக்கினாா். இதில் தலைமைக் காவலா் கனகராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காவலா் ராஜன் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். இது குறித்து தக்கோலம் காவல் ஆய்வாளராக இருந்த துரை பாண்டியன் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் குற்றவியல் மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.சீனிவாசன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சீனிவாசன், தலைமைக் காவலரை டிராக்டரை ஏற்றிக் கொலை செய்த சுரேஷுக்கு (31) ஆயுள் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

‘புன்னகையைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

February 19, 2021 Naren Dran
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.  மேலும் இதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் புன்னகையைத் தேடி (ஆபரேஷன் ஸ்மைல்) என்ற திட்டத்தின் கீழ் வாகனங்களில் மாவட்டம் முழுவதும் சென்று குழந்தைகள் மீட்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் 3 மாவட்டங்களில் கடந்த 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்கொண்ட மீட்பு பணியில் 31 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 எஸ்ஐகள் தலைமைக் காவலர்கள் உட்பட 20 காவலர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 எஸ்ஐகள் தலைமைக் காவலர்கள் உட்பட 20 காவலர்கள் பணியிட மாற்றம்

February 19, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 எஸ்ஐகள் தலைமைக் காவலர்கள் உட்பட 20 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிவகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் கள் பின்வருமாறு :  ராணிப்பேட்டை எஸ்பி அலுவலக எஸ்ஐ சிதம்பரம் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கும் , சைபர் செல் பிரிவு எஸ்ஐ சரவணன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் , நெமிலி எஸ்ஐ பசலைராஜ் திமிரி போலீஸ் நிலையத்திற்கும் , ஆற்காடு தாலுகா போலீஸ் எஸ்ஐ பாலாஜி காவேரிப்டவுன் சிறப்பு பிரிவு எஸ்ஐ சையத்நசீர் பாக்கம் போலீஸ் நிலையத்திற்கும் சிப்காட் போலீஸ் எஸ்ஐ வசந்த காவே ரிப்பாக்கத்திற்கும் , ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு யிடமாற்றம் செய்யப்பட்டனர் .  அதேபோல் , சிப்காட் தலைமைக் காவலர் சுப்பிரமணி ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற் கும் , சோளிங்கர் போலீஸ் நிலைய காவலர் அருண் வாலாஜாவிற்கும் ராணிப்பேட்டை டவுன் போலீஸ் நிலைய காவலர் நாதமுனி கொண்ட பாளையத்திற்கும் , ஆற்காடு டவுன் காவலர் நீலகண்டன் ரத்தனகிரிக்கும் சோளிங்கர் போலீஸ் நிலைய காவலர் ராஜசேகரன் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய...
சோளிங்கரில் கோவில் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

சோளிங்கரில் கோவில் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

February 19, 2021 Naren Dran
சோளிங்கரில் கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் கோவில் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகாரெட்டி தெருவைச் சேர்ந்த பிரகாஷ். கட்டிட கான்டிராக்டர். இவருடைய மனைவி சுயாதேவி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாணவி சுயா தேவி திருத்தணி முருகன் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.  கோரோனா காலத்தில் கட்டிட வேலை சரியாக நடக்காததால் பிரகாஷ் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுயாதேவி தூக்குப் போட்டுக்கொண்டார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுயாதேவி வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.சிவகுமார் அவர்கள் பதவி ஏற்றார்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.சிவகுமார் அவர்கள் பதவி ஏற்றார்

February 18, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம்   ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.சிவகுமார் அவர்கள் பதவி ஏற்றார்.
Ampere Electric will set up an e-mobility manufacturing facility at Ranipet

Ampere Electric will set up an e-mobility manufacturing facility at Ranipet

February 18, 2021 Naren Dran
Electric vehicle manufacturer Ampere Electric will set up an e-mobility manufacturing facility at Ranipet. Ampere Electric, which was acquired by Greaves Cotton two years ago, has signed a Memorandum of Understanding (MoU) in this regard with the Tamil Nadu government. According to a press release, the company proposes to invest ₹700 crore over 10 years at the facility. With more than 1.4 million sq.ft, the plant will be one of the largest state-of-the-art e-mobility manufacturing plants in the country, when commissioned. The press statement said that Ampere Electric’s Ranipet plant will have the capacity to manufacture one lakh units in its first year of operation and the potential to scale up to one million units in a year. This facility is expected to be operational in 2021. Nagesh Basavanhalli, Group CEO and MD of Greaves Cotton, said, “This is a historic milestone for Greaves Cotton, as we outline our investment to transform the clean mobility landscape in India...This mov...