Subscribe to Newsletter

phonesdns - Mobile Phone Repair Daily New Solutions

arakkonam
10 பேரை கடித்து குதறிய வெறிநாய் அரக்கோணம்

10 பேரை கடித்து குதறிய வெறிநாய் அரக்கோணம்

February 22, 2021 Naren Dran
அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று அங்குமிங்குமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தது . இந்த நாய் அப்பகுதியை சேர்ந்த சுமார் 10 க்கும் மேற்பட்டோரை நேற்றுமுன்தினம் கடித்து குதறியது .  இதில் , காயமடைந்தவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றனர் . இதையடுத்து , அப்பகுதிமக்கள் வெறிநாயை துரத்தி அடித்தனர் .  இந்நிலையில் , வெறிநாய் தொல்லையிலிருந்து அப்பகுதி மக்கள் விடுபடவில்லை அச்சத்துடனே காணப்படுகின்றனர் . எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு பொதுமக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அரக்கோணத்தில் பாழடைந்து , இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் தலைமை அஞ்சலகம்

அரக்கோணத்தில் பாழடைந்து , இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் தலைமை அஞ்சலகம்

February 09, 2021 Naren Dran
அரக்கோணத்தில் பாழடைந்து , இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் தலைமை அஞ்சலகம்  இயங்கி வருவதால் அக்கட்டடத்தின் உள்ளே செல்ல பொதுமக்கள் தயங்கும் நிலை காணப்படுகிற.  அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் இரு தலைமை அஞ்சலகங்கள் உள்ளன . ஒன்று அரக்கோணத்திலும் , மற்றொன்று ராணிப்பேட்டையிலும் இயங்கி வருகின்றன . அரக்கோணம் தலைமை அஞ்சலகத்துக்கு கடந்த 1980 - ஆம் ஆண்டில் புதிய கட்டடம் சொந்தமாக கட்டப்பட்டு அதில் அலுவலகம் இயங்கி வந்தது . அக்கட்டடத்தின் மாடியில் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வந்தது .  இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடத்தின் முதல் மாடியின் மேற்கூரைகள் இடிந்து விழத் தொடங்கின . இதனால் அக்கட்டடத்தில் பணியாற்ற அலுவலர்கள் மறுத்ததால் , அலுவலகம் தரைதளத்தில் அஞ்சலக அலுவலகப் பகுதியிலேயே இயங்கி வந்தது . அண்மையில் தரைத் தளத்திலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அவை எப்போது விழுமோ என்ற நிலை உருவானது . மேலும் தரைத்தளத்திலும் மேற்கூரைகள் இடிந்து விழத்தொடங்கின . இதையடுத்து அண்மையில் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது .  இந...
அரக்கோணத்தில் கிரிகெட் விளையாடிய காவல் கண்காணிப்பாளர்

அரக்கோணத்தில் கிரிகெட் விளையாடிய காவல் கண்காணிப்பாளர்

February 07, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பழனி பேட்டை கிரிபில்ச் பேட்டை வழியாக அரக்கோணம் நகர காவல் நிலையம்வரை இரண்டு சிறுவர்கள் மட்டும் இருபது கி.மீத்தூரம் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஏந்தி சைக்கிளில் சென்றனர்.  சாலை விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு  எனவும் சாலை விபத்து ஏற்படாமல் தவிர்க்கச் சாலை விதிகள் கடைபிடித்தல் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாய தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அரிவுரத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில் வாகனம் இரண்டு சிறுவர்கலுக்கு பரிசுகளை வழங்கிச் சாலை விதிகள் கடைபிடிக்க ஆலோசனைகள் வழங்கினார். மேலும் அருகிலிருந்த மாணவர்களுடன் சிறிது நேரம் கிரிகெட் விளையாடினார்.
அரக்கோணத்தில் மழலைகளின் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரக்கோணத்தில் மழலைகளின் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

February 07, 2021 Naren Dran
அரக்கோணம்: அரக்கோணத்தில் மழலைகளின் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் சென்று சாலை விழிப்புணர்வு நடத்தினர். ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியை அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பாராட்டினார்.
Road safety awareness given by Two Children's

Road safety awareness given by Two Children's

February 06, 2021 Naren Dran
Road safety awareness was given by Two children's of Aldrin Joe.G 2nd STD and 5th STD Surya.S ADW primary School Kainoor of 20Kms starting by our Respectable Mr.K.Manoharan DSP , Arakkonam sub division . After completion children's were honoured with prizes in a Ranger cycle , Medals and certificates by our Hounarable Mr.A.Mayilvaganan IPS , Superintendent of police , Ranipet District .
அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

February 04, 2021 Naren Dran
ராணிபேட்டை: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஷ்டன் புஷ்பராஜ் திடீரென வந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அறைகள் தூய்மையாக உள்ளதா மற்றும் நோயாளிகளுக்கு முறையாக மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா? எனச் சிகிச்சை பெற்று வருபவர்கலிடம் நேரடியாகக் கேட்டரிந்தார். மேலும் மருத்துவ மனையில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மையாக உள்ளதா எனப் பார்வையிட்டார். அரக்கோணம் அரசு மருத்துவர் நிவேதிதா சங்கர் உடன் இருந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் குட்டை போலத் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தி செய்து மேலும் அதில் பல நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். ஆட்சியர் உடனடியாக நகராட்சி நிர்வாகத்தை அழைத்துத் தேங்கிய கழிவு நீர் அகற்ற ஆணையிட்டார்.அதன்படி தூய்மை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய கழிவு நீரை அகற்றினர்.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக எலக்ட்ரிக் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக எலக்ட்ரிக் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது

February 02, 2021 Naren Dran
அரக்கோணம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக சித்தூர் கிராமத்தில் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் மீனா என்பவரின் குடும்பத்திற்கு எலக்ட்ரிக் தையல் இயந்திரதம் இலவசமாக இன்று வழங்கப்பட்டது. அரக்கோணம் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பாக சிறிது நாட்களுக்கு முன்பு சித்தூர் சேந்தமங்கலம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் மீனா என்பவர் அவரது குடும்ப வறுமை காரணமாக மிகவும் கஷ்டப்படுவது தெரியவந்தது, இதனை அடுத்து அறக்கட்டளை சார்பாக அவருக்கு இன்று இலவச தையல் இயந்திரம் கொடுக்கப்பட்டது. இது அவரது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னாள் சத்தியபாமா பல்கலைகழக மாணவர் ஹெர்பர்ட் ராஜ் என்பர் நிதியுதவியுடன் சுகந்தி என்பவர் வழங்கினார்.
பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

February 02, 2021 Naren Dran
ராணிபேட்டை: பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.   ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ராமாரெட்டி மகன் பெருமாள் (48) திருமணமாகி ஒரு மனைவி இரண்டு மகன்கலுடன் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.பெருமாள் வழக்கமான தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவு வீட்டில் லைட் எரியவில்லை இதனால் அருகில் உள்ள மின்மார்ரியில் சரிசெய்ய சென்ரவர் மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது.பானாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாணாவரம் அருகே அவலம் பாராக மாறிய தொடக்கப்பள்ளி வளாகம்

பாணாவரம் அருகே அவலம் பாராக மாறிய தொடக்கப்பள்ளி வளாகம்

January 30, 2021 Naren Dran
பாணாவரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தை பாராக மாற்றிய சமூக விரோதிகளால் பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர்.  பாணாவரம் அருகே உள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . இப்பள்ளியில் 140 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் . இந்நிலையில் , கொரோனா வைரஸ் பரவலை தடுக்க , கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது 10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது . தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் , சீருடை , உலர் உணவுப்பொருட்கள் வழங்கல் , மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் , காட்டுப்பாக்கம் தொடக்கப் பள்ளியில் கடந்த 26 ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடினர் . அப்போது பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் காலி மதுபாட்டில்கள் , பிளாஸ்டிக்டம்ளர்கள் , குடிநீர் பாட்டில்கள் , தின்பண்டகழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் , மாணவர்கள் ,  ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அப்போது பள்ளி தூய்மைப்பணியாளர்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த காலி மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை ...
அரக்கோணத்தில் புதிய ரயில் நிலையம் திறப்பு

அரக்கோணத்தில் புதிய ரயில் நிலையம் திறப்பு

January 28, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ரயில் நிலையம் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெரிய ரயில் நிலையம் ஆகும்.அரக்கோணத்தில் விரிவுபடுத்தப் பட்ட புதிய ரயில் நிலையத்தை மாதிஷ் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இதில் அரக்கோணம் ரயில்வே நிலைய மேலாளர், பொறியாளர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அடுத்த பிஞ்சிவாக்கம் பகுதியில் இன்று திடிர் சாலை மறியல்

அரக்கோணம் அடுத்த பிஞ்சிவாக்கம் பகுதியில் இன்று திடிர் சாலை மறியல்

January 28, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சூலூர் பகுதியில் உள்ள பிஞ்சிவாக்கம் பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் இடுபட்டனர். சரி வரக்கூடிய குடி தண்ணீர் வராத காரணத்தினால் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சென்னை அரக்கோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்  ஈடுபட்டனர். இன்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை வீட்டுக்கு செல்ல இருந்த வாகனங்களை மரித்தும் அதேபோல அந்த பகுதியில் வரும் தொழிற்சாலை வெண்கள் மரித்தும் சாலை மறியலில் இடுபட்டனர், உடனடியாக காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்தது சென்றனர்.
அரக்கோணம்: பாதாள சாக்கடையில் லாரி சிக்கியது போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம்: பாதாள சாக்கடையில் லாரி சிக்கியது போக்குவரத்து பாதிப்பு

January 26, 2021 Naren Dran
அரக்கோணம் , ஜன . 26 : சோளிங்கரில் உள்ள தனியார் கம் பெனியில் இருந்து நேற்று காலை உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் அம்பேத்கர் நகர் வழி யாக சென்றபோது , சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டு பாதாள சாக்கடையில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைந்து சிக்கியது . இதனால் அரக்கோணம் - திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அரசு பஸ் , தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தது இதனால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் , பள்ளி , கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.  மேலும் , விபத் தில் சிக்கிய லாரியை மீட்டனர் . இதனால் , அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக் குவரத்து பாதிக்கப் பட்டது .
அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கம் அருகே ரயிலில் அடிப்பட்ட இறந்த புள்ளிமான்

அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கம் அருகே ரயிலில் அடிப்பட்ட இறந்த புள்ளிமான்

January 22, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேடிவந்த புள்ளி மான் ஒன்று அடிப்பட்டு இறந்து கிடந்தது. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயம் நிலத்திற்கு செல்லும்போது மான் அடிப்பட்டு கிடந்தது பார்த்தனர்.  உடனடியாக வனத்துறையினருக்கு தெரிய படுத்தினர்.அவர்கள் வந்து புல்லிமானை எடுத்துச் சென்றனர். மேலும் இது போன்ற அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புள்ளி மான்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணிபேட்டை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில்  தடம் புர்ண்டதால் பரபரப்பு

ராணிபேட்டை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புர்ண்டதால் பரபரப்பு

January 22, 2021 Naren Dran
ராணிபேட்டை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் புதியதாக இரயில்வே நிலையம் ஏற்கனவே இருப்பதை விடப் பெரியதாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதர்குண்டான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் கொட்டப்படும் ஜல்லிகர்கலை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயிலின் 4ஆவது பெட்டி திடீரென அரக்கோணம் புது ரயில் நிலைதில் வரும்போது தடம் புரண்டது. இதனால் அதிஷ்டவசமாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள், பொறியாளர்கள் வந்து அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணத்தில் சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

அரக்கோணத்தில் சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

January 22, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் அதிமுக-வின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் ரவி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் சோளிங்கர் ஒன்றிய செயலாளர் பழனி, அரக்கோணம் நகர செயலாளர் பாண்டுரங்கன் முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதற்கடுத்து அரக்கோணம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.
அரக்கோணம் ரயில் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு

அரக்கோணம் ரயில் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு

January 20, 2021 Naren Dran
ராணிபேட்டை: அரக்கோணத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை மற்றும் அதன் வளர்ச்சி திட்டப் பணிகள்குறித்து டிஆர்எம் மாதேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரக்கோணத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சசிகுமார் மீது கொலை முயற்சி

அரக்கோணத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சசிகுமார் மீது கொலை முயற்சி

January 16, 2021 Naren Dran
அரக்கோணம்: அரக்கோணத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சசிகுமார் மீது கொலை முயற்சி - கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் அரக்கோணத்தில் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சசிகுமார் என்பவரை மர்ம கும்பல் கொல்ல முயற்சி இதனால் அரக்கோணத்தில் பரபரப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தமுடைய சசிக்குமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சசிகுமாரை காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி முயற்சித்துள்ளனர், இதனால் காயம் அடைந்த சசிக்குமார் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் வருவதை கண்டு வெட்ட வந்த கும்பல் தப்பி ஓடி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அறிவாளிகள் அரக்கோணம் நகர காவல் துறையினர் கைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரக்கோணம்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை படுஜோர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அரக்கோணம்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை படுஜோர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

January 04, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஷ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்ரனர். பாலிதின், கவர், டம்லர் போன்றவற்றை மீண்டும் தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தடிநீர் மாசுபடுவதாலும் மற்றும் மண்ணில் மக்கும் தன்மையை கடினமாக இருப்பதால் தமிழக அரசாங்கம் கடந்த வருடத்திற்கு முன் புதிய சட்டத்தை நிறைவேற்றியது.  இதன்படி மைக்ரான் அளவு குறைவாகக் கொண்ட பிளாஷ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என தமிழக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள்மீது பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தடைசெய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என கெடுபிடியாக சோதனைகள் செய்ததில் பிளாஷ்டிக் பயன்பாடு குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கடைபிடிக்காமல் தற்போது மீண்டும் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஷ்டிக் பொருட்களை மீண்டும் வெளிப்படையாக வெகுஜோராக விற்பனை செய்து வருகின்றனர். இதன் பின்னால் பல பகீர் காரணங்களும் சொல்லப்படுகிறது. பல அதி...
அரக்கோணத்தில் மினி கூவம்

அரக்கோணத்தில் மினி கூவம்

December 30, 2020 Naren Dran
 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நகரின் நடுவில் அமைந்துள்ளது இரயில்வே நிலையம் . இதனால் இரு பகுதிகளாக பிரிந்து காட்சியளிக்கிறது . அந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சாலை இரண்டு கண் சுரங்க பாதையாகும் இதில் சிறிய மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய அளவில் உள்ளது .  பாதசாரிகளும் இதே பாதையில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது . இதனை தடுக்கும் விதமாக பாதசாரிகள் செல்ல ரூ .3 கோடி மதிப்பீட்டில் புதிய சுரங்க பாதை அமைக்கப்பட்டது . ஆனால் அது இன்றளவும் பயன்பாட்டிற்கு வரவில்லை . சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி மினி கூவம் போல காட்சியளிக்கிறது .  நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்களின் பயன்பாட்டிற்கு சுரங்க பாதை திறக்கப்பட வேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர் .
வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பரிசுகள்

வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு பரிசுகள்

December 30, 2020 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி அரக்கோணத்தில் நடைபெற்றது.இதில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை , மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 13 அணிகள் கலந்து கொண்டனர். இதில் ஏழு பெண்கள் அணியினர் , ஆறு ஆண்கள் அணியினர் என 64 வீரர்கள் கலந்து கொண்டனர் . அரக்கோணம் டேபிள் டென்னிஸ் பயிற்சி ஆசிரியர் சதீஷ் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது . மேலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பங்குபெற்ற வீரர்கள் உற்சாகமாக விளையாடினர் .