ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பொய்ப்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தண்ணீர் தேடிவந்த புள்ளி மான் ஒன்று அடிப்பட்டு இறந்து கிடந்தது. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயம் நிலத்திற்கு செல்லும்போது மான் அடிப்பட்டு கிடந்தது பார்த்தனர். 

உடனடியாக வனத்துறையினருக்கு தெரிய படுத்தினர்.அவர்கள் வந்து புல்லிமானை எடுத்துச் சென்றனர். மேலும் இது போன்ற அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புள்ளி மான்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.