Subscribe to Newsletter

phonesdns - Mobile Phone Repair Daily New Solutions

Arcot
ஆற்காடு: வியாபாரியின் பைக் திருட்டு

ஆற்காடு: வியாபாரியின் பைக் திருட்டு

February 28, 2021 Naren Dran
வியாபாரியின் பைக் திருட்டு ;  ஆற்காடு அடுத்த மேல்வி ஷாரத்தை சேர்ந்தவர் சையத் ஏசானுல்லா ( 52 ) , வியாபாரி. இவர் தனது பைக்கை கடந்த நவம்பர் 8 ம் தேதி வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது பைக்கை காணவில்லை . அதிர்ச்சியடைந்த அவர் , பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.  இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை தேடி வருகின்றனர். 
ஆற்காடு: மணல் கடத்தியவர் கைது

ஆற்காடு: மணல் கடத்தியவர் கைது

February 28, 2021 Naren Dran
மணல் கடத்தியவர் கைது :  ஆற்காடு டவுன் எஸ்ஐ சுரேஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தாழனூர் இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது , அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை சோதனைக்கு நிறுத்தினர்.  போலீசாரை கண்டதும் வண்டியில் அமர்ந்து வந்த 2 பேர் தப்பியோடினார் . போலீசார் விரட்டிச்சென்றதில் ஒருவர் பிடிபட்டார் . விசாரணையில் , அவர் தாழனூர் இந்திரா நகரை சேர்ந்த அஜய் ( 26 ) என்பதும் , மாட்டுவண்டியில் மணல் கடத்தியதும் தெரியவந்தது . அவரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர் . தப்பியோடிய யுவராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
ஆற்காடு அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்

ஆற்காடு அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்

February 28, 2021 Naren Dran
பைபாஸ் சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.  ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் பிரோஸ்ட் வயது 36 இவர் நேற்று முன்தினம் மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்,அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது அதன்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காடு உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஆற்காடு உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

February 23, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரையில் சன்னியாசி மடம் அருகில் உள்ள உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதிகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இக்கோயிலில் உள்ள சூலினி பிரத்யங்கிரா சமேத சரபேஸ்வரா், ஸ்ரீ ஆஞ்சநேயா், 18 சித்தா்கள், அருணாசலேஸ்வரா் ஐம்பொன் கவசம், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி உலா திருமேனி ஆகிய சந்திதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதையொட்டி, சிறப்பு யாக பூஜை கலச பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, திங்கள்கிழமை கும்பாபிஷேகமும், மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, கலவை சச்சிதானந்த சுவாமி, தொழிலதிபா்கள் ஜெ.லட்சுமணன், ஏ.வி.சாரதி, திருப்பணிக் குழுத் தலைவா் பென்ஸ் பாண்டியன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தின் பொருளாளா் பி.என். பக்தவச்சலம், தொழிலதிபா் ஆா்.எஸ். சேகா், சரபேஸ்வரா் வார வழிபாட்டு மன்றத் தலைவா் உதயசங்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பாரம்பரிய நெல்: கண் பார்வையை மேம்படுத்தும் ஆற்காடு கிச்சலி சம்பா…!!.!

பாரம்பரிய நெல்: கண் பார்வையை மேம்படுத்தும் ஆற்காடு கிச்சலி சம்பா…!!.!

February 21, 2021 Naren Dran
இன்று பார்க்க இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த ஒரு அருமையான அரிசி வகையான ஆற்காடு கிச்சலி சம்பா. இந்த நெல் வகையானது ஆரணி, திண்டிவனம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இது நூற்றி பன்னிரண்டில் இருந்து நூற்றி பதினைந்து நாட்கள் வயதுடைய ஒரு நெல் இரகம். இதன் பிறகு ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமிக்கு அரிசி ஒரு இருட்டு அறையில் வைக்கப்பட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.  ஆற்காடு கிச்சலி சம்பா அரிசியில் வைட்டமின் A சத்து அதிக அளவில் உள்ளது. பழங்காலத்தில் குழந்தை பிறந்த பிறகு அதற்கு கொடுக்கும் முதல் உணவாக இந்த ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி தான். இந்த அரிசியில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.    ஒரு அரிசியில் இத்தனை சத்துக்கள் இருக்குமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் இது தான் உண்மை. இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்க நீங்கள் பட்டை தீட்டப்படாத அரிசியை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பட்டை தீட்டிய அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டும் தான் இருக்கும்.  வளரும் குழந்தைகளுக்கு இந்த ...
ஆற்காடு அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆற்காடு அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

February 19, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயர். இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அதே பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் பிரகாஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது சாத்தூர் அடுத்த விலாரி கிராமத்தில் ஏரிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

ஆற்காடு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

February 18, 2021 Naren Dran
ஆற்காடு நகரத்தில் இயங்கிவரும் மின் வாரிய செயற்பொறியாளர் , ஆற்காடு கோட்ட அலுவலகம் மற்றும் உதவி கணக்கு அலுவலர் , வருவாய் பிரிவு அலுவலகம் நாளை முதல் , தாழனூர் கிராமத்தில் இயங்கி வரும் 110/33/11 கிவோ ஆற்காடு துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்படும் என ஆற்காடு செயற் பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம்: ஆட்டோ மீது வேன் மோதி டிரைவர் பலி

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம்: ஆட்டோ மீது வேன் மோதி டிரைவர் பலி

February 07, 2021 Naren Dran
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் புதுப்பேட்டை 3 வது தெருவைச் சேர்ந்தவர் உஸ்மான் ( 45 ) . ஆட்டோ டிரைவர் . இவர் கடந்த 3 ம் தேதி மாலை தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காட்டில் விட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் மேல்விஷாரம் சென்றார். வேப்பூரில் உள்ள தனியார் பள்ளி எதிரே சென்ற போது பின்னால் வேகமாக வந்த வேன் ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது . இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உஸ்மான் படுகாயம் அடைந்தார் . அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து அவரது மனைவி தில்ஷாக் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார் . அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை தேடி வருகிறார்.
ஆற்காட்டில் பைக் ரேஸ் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம்

ஆற்காட்டில் பைக் ரேஸ் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம்

February 03, 2021 Naren Dran
ஆற்காட்டில் மின்னல் வேகத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் பைக் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பெரிய நகரமான ஆற்காடு வந்து செல்கின்றனர். அதேபோல் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், துணை கருவூலம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், நீதிமன்றம் மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். மேலும் ஆன்மீக நகரமான ஆற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கங்காதர ஈஸ்வரர் கோயில், வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இதனால் ஆற்காடு அண்ணாசாலை, வேலூர் மெயின் ரோடு, பஜார் வீதி, கலவை சாலை, ஆரணி சாலை உட்பட அனைத்து சாலைகளிலும் பகல் நேரங்களில் அதிகளவு பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் ஆற்காடு வேலூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தங்களது ஊ...
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

January 31, 2021 Naren Dran
ஆற்காடு அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தூக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார். ரோட்டரி சங்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்தினர், இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டின் புஷ்பராஜ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட துணை இயக்குனர் பொறுப்பு மருத்துவர் வீராசாமி ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் சிவசங்கரி ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கம் தலைவர் பூபாலன் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்க மருத்துவமனை இயக்குனர் விஜய் மற்றும் அரசு மருத்துவர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
ஆற்காடு அடுத்த கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆற்காடு அடுத்த கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

January 30, 2021 Naren Dran
கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் 11 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று தங்ககவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் நேற்று 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார் . விழா முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  விழாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர் . அனைவருக்கும் வெப்ப அளவு பரிசோதிக் கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது
திமிரியில் பேனர்களை அகற்றிய டிராபிக் ராமசாமி

திமிரியில் பேனர்களை அகற்றிய டிராபிக் ராமசாமி

January 29, 2021 Naren Dran
சென்னையிலிருந்து ஆரணி நோக்கி டிராபிக் ராமசாமி சென்றுகொண்டிருந்தார். திமிரி பஸ் ஸ்டேண்டு அருகே சென்றபோது அமமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் கண்டு திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4 அமமுக பேனர்களை அகற்றி, பேனர் வைத்த திமிரி நகர அமமுக செயலாளர் கேசவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஆற்காடு: பைக் மீது லாரி மோதி பெயிண்டர் பலி

ஆற்காடு: பைக் மீது லாரி மோதி பெயிண்டர் பலி

January 25, 2021 Naren Dran
ஆற்காடு , ஜன .25 :  ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஜி.எம் . நகரை சேர்ந்தவர் சுகுமார் ( 33 ) , பெயிண்டர் . இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் , ஒரு மகன் , ஒரு மகளும் உள்ளனர் . நேற்று முன்தினம் சுகுமார் புதுப்பாடியில் இருந்து சின்னகுக்குண்டி கிராமத்திற்கு பைக்கில் சென்றார் . கலவை சாலையில் சென்றபோது புதுச்சே ரியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி , இவரது பைக் மீது மோதியது . இதில் தூக்கிவீசப்பட்ட அவர் , தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக் குப்பதிந்து தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
திமிரியில் தாயம் விளையாடியபோது  தகராறு -  ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து

திமிரியில் தாயம் விளையாடியபோது தகராறு - ஒருவருக்கு பீர் பாட்டில் குத்து

January 22, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம், அருந்ததிபாளையத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(53). கூலித்தொழிலாளி.  இவர் கடந்த 17ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(23), ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தாயம் விளையாடியுள்ளார். அப்போது விளையாட்டு தொடர்பாகச் சுரேஷ், ராமதாசுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அருகிலிருந்த பீர் பாட்டிலை உடைத்து ராமதாசின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராமதாசை அருகிலிருந்தவர்கள் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ராமதாஸ் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
ஆற்காடு அருகே காரில் மணல் கடத்தியவர் கைது

ஆற்காடு அருகே காரில் மணல் கடத்தியவர் கைது

January 10, 2021 Naren Dran
காரில் மணல் கடத்தியவர் கைது ஆற்காடு அருகே காரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு டவுன் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ரவுண்டானா அருகே நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது , அவ்வழி யாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் மூட்டைகளில் மணல் கட்டி நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது . கார் மற்றும் 10 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஓட்டி வந்த அருங்குன்றம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த வன்னிய தாஸ் ( 26 ) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திமிரி குமரகிரி-  ரூ.3.76 கோடி மதிப்பில் மலைப்பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா

திமிரி குமரகிரி- ரூ.3.76 கோடி மதிப்பில் மலைப்பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா

January 09, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் உள்ள குமரகிரி மலை, அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு ரூ.3 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்க அடிக்கல் நாட்டு விழா காலை 8 மணியளவில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், ஆற்காடு தாசில்தார் காமாட்சி, மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவுச் செயலாளர் ஆற்காடு சாரதி, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர் அப்துல்லா, திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரைப்பாக்கம் கிருஷ்ணன், திமிரி பேரூர் அதிமுக செயலாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர் விஜயகுமார், கோயில் செயல் அலுவலர் ஏகவல்லி, திமிரி செங்குந்தர் சமுதாய தலைவர் சண்முகம், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சம்பந்தன், அறங்காவலர்கள் சேகர், நந்தகோபால், திமிரி பேரூர் கழக அவைத்தலைவர் நாராயணமூர்த்தி, துணைச்செயலாளர் கந்தசாமி, 15-வார்டு வட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு: முப்பதுவெட்டி கிராமத்தில் காதல் தகராறு காரணமாக வாலிபர் கொலையா, என ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை

ஆற்காடு: முப்பதுவெட்டி கிராமத்தில் காதல் தகராறு காரணமாக வாலிபர் கொலையா, என ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை

January 07, 2021 Naren Dran
முப்பதுவெட்டி கிராமத்தில் காதல் தகராறு காரணமாக வாலிபர் கொலையா ஆற்காடு டவுன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அற்காட் அடுத்த முப்பதுவெட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா வயது 25 இன்று காலை இவர் முப்பதடி கிராமம் ஏரிக்கரை அருகே வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் சூர்யா காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்காடு: ராமாபுரத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆற்காடு: ராமாபுரத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

January 06, 2021 Naren Dran
ஆற்காடு: ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம். ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குளிர்ச்சிலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி முக்குளிப்பு சித்தர் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆற்காடு: தக்காங்குளம் கிராமத்தில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நம்மாழ்வார், ஜெயராமன் நினைவஞ்சலி அனுசரிப்பு

ஆற்காடு: தக்காங்குளம் கிராமத்தில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நம்மாழ்வார், ஜெயராமன் நினைவஞ்சலி அனுசரிப்பு

January 01, 2021 Naren Dran
தக்காங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முனைவர் கோ நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் இணையும் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தக்காங்குளம் கிராமத்தில் உள்ள கே எம் இயற்கை வழி வேளாண்மையில் இன்று காலை 9 மணிக்கு முனைவர் கோ நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவஞ்சலியும் அவர்களது திருவுருவப் படத்திற்கு தொண்டைமண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே எம் பாலு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள். ஆனந்தகுமார் உதயசங்கர் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்
ஆற்காடு: ஆற்காட்டில் 18 சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

ஆற்காடு: ஆற்காட்டில் 18 சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

January 01, 2021 Naren Dran
ஆற்காட்டில் பதினெட்டு சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இரண்டில் ஸ்ரீ அகத்தியரை மூலவராகக் கொண்டு பதினெட்டு சித்தர்கள் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஆக சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் முன்னதாக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு புனிதநீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது