ஆற்காடு , ஜன .25 :
ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஜி.எம் . நகரை சேர்ந்தவர் சுகுமார் ( 33 ) , பெயிண்டர் . இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் , ஒரு மகன் , ஒரு மகளும் உள்ளனர் . நேற்று முன்தினம் சுகுமார் புதுப்பாடியில் இருந்து சின்னகுக்குண்டி கிராமத்திற்கு பைக்கில் சென்றார் . கலவை சாலையில் சென்றபோது புதுச்சே ரியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி , இவரது பைக் மீது மோதியது . இதில் தூக்கிவீசப்பட்ட அவர் , தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக் குப்பதிந்து தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.