Subscribe to Newsletter

phonesdns - Mobile Phone Repair Daily New Solutions

News
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

February 26, 2021 Naren Dran
சென்னை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

February 23, 2021 Naren Dran
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.   ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

February 17, 2021 Naren Dran
நாடு முழுவதும் பள்ளிகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோவு மே 4 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இதற்கான செய்முறைத் தோவுகள் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில் செய்முறைத் தோவுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தோவுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - ஆய்வகங்களில் 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் தெளிக்கப்பட வேண்டும். அதே கரைசலை எடுத்துப் பள்ளி வளாகம், பொருள்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாச...
இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு..!

இன்று முதல் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு..!

February 15, 2021 Naren Dran
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சிலிண்டருக்கான இந்த விலை உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இன்று 14கி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.785ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் டிரான்ஸ்பர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் டிரான்ஸ்பர்

February 11, 2021 Naren Dran
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் டிரான்ஸ்பர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார் .  சோளிங்கர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த ஜெயபிரகாஷ் , வாலாஜா தாசில்தாராகவும் , அங்கு பணியில் இருந்த பாக்கியநாதன் , நெமிலி தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் , அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் நிலம் எடுப்பு திட்ட தாசில்தார் சுமதி , நெமிலி தாசில்தாராகவும் , நெமிலியில் இருந்த ராஜராஜசோழன் , சோளிங்கர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் , நெமிலி சமூக பாதுகாப்பு திட்ட தாசில் தார் கந்தீர்பாவை , அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் நிலம் எடுப்பு திட்ட தாசில்தாராகவும் , கலவை தேர்தல் துணைதாசில்ததார் வசந்தி , ராணிப்பேட்டை நகர நிலம் எடுப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . 
வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்

வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்

February 05, 2021 Naren Dran
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்திய மக்களுக்காக வெறும் 7 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் மாருதி சுசூகி நிறுவனம், தனது வெற்றிகரமான பிராண்டான வேகன்ஆர் பிராண்டின் கீழ் புதிதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கார் வெறும் 6 மணிநேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்து உள்ளதாகவும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையில் செல்லும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றும் தெரிவருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? அச்சத்தில் மக்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? அச்சத்தில் மக்கள்

February 02, 2021 Naren Dran
2021 - 22க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.   ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுவிட்டது. தமிழகத்தின் சில பகுதிகளில் 90 ரூபாய் வரை பெட்ரோல் விற்கப்படுகிறது. பிறபகுதிகளில் ரூ.83 முதல் ரூ90 வரை விற்கப்பட்டு வருகிறது. இதற்கான வரிகள் குறைக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்த கூடுதல் வரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த கூடுதல் வரியினால் விலையில் மாற்றம் இருக்காது என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அவரது அறிவிப்பின் படி இந்த கூடுதல் வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சென்னையைப் பொருத்தவரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.88.82 க்கும், டீசல் லிட்டர் 81.71 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
FlashNews: டெல்லியில் குண்டுவெடிப்பு – நாடு முழுவதும் உச்சகட்ட பதற்றம் ….!!

FlashNews: டெல்லியில் குண்டுவெடிப்பு – நாடு முழுவதும் உச்சகட்ட பதற்றம் ….!!

January 29, 2021 Naren Dran
தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குடுவெடிப்பு நடந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது டாக்டர் அப்துல்கலாம் சாலை. இந்த சாலையில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த இடத்துக்கு அருகே சற்றுமுன் ஒரு வெடிகுண்டு வெடித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நான்கைந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு நபர் காயம் அடைந்து இருக்கிறார் என்று ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இதனால் உடனடியாக டெல்லி போலீசார் அந்த பகுதியில் உள்ள சாலைகளை மூடி, குண்டு வெடித்த இடத்திலேயே தற்போது ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு வாகனங்களையும் நிறுத்தி வைத்து, வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா ? ஒரு குண்டு வெடித்த நிலையில், வேறு ஏதேனும் அந்த பகுதியில் குண்டு வைக்கப்பட்டுள்ளதா ? இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்று தற்போது விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஓச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம்

ஓச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம்

January 28, 2021 Naren Dran
ஓச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம். ஓட்டேரி அடுத்த மாமந்தூர் பகுதியில் பெண் ஆசிரியர் மாயம் போலீசார் விசாரணை கோரி அப்பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு வேலை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை திடீரென மாயமாகி விட்டார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவருக்கு குவியும் பாராட்டு

மருத்துவருக்கு குவியும் பாராட்டு

January 26, 2021 Naren Dran
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவராகக் கமலக்கண்ணன் பணிபுரிந்து வருகிறார். அவர் தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்துக்கொண்டார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவரைப் பாராட்டி அரசு சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!

January 26, 2021 Naren Dran
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் CMC எனும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வகத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 01 பணி : Technical Assistant கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று  Medical Laboratory Technology பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  https://clin.cmcvellore.ac.in/   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.02.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : வி...
ராணிப்பேட்டை அரசினர் பள்ளி மைதானத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்.

ராணிப்பேட்டை அரசினர் பள்ளி மைதானத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்.

January 25, 2021 Naren Dran
ராணிப்பேட்டையில் குடியரசு தின விழா நடைபெற உள்ள இடத்தில் ஏற்பாடுகள் தீவிரம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிலஸ்டின் புஷ்பராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்,  இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பாக்கியநாதன் மற்றும் ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பந்தல் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் கோரான தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு விழாவின் ஏற்பாடு செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆற்காடு: பைக் மீது லாரி மோதி பெயிண்டர் பலி

ஆற்காடு: பைக் மீது லாரி மோதி பெயிண்டர் பலி

January 25, 2021 Naren Dran
ஆற்காடு , ஜன .25 :  ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஜி.எம் . நகரை சேர்ந்தவர் சுகுமார் ( 33 ) , பெயிண்டர் . இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் , ஒரு மகன் , ஒரு மகளும் உள்ளனர் . நேற்று முன்தினம் சுகுமார் புதுப்பாடியில் இருந்து சின்னகுக்குண்டி கிராமத்திற்கு பைக்கில் சென்றார் . கலவை சாலையில் சென்றபோது புதுச்சே ரியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி , இவரது பைக் மீது மோதியது . இதில் தூக்கிவீசப்பட்ட அவர் , தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் வழக் குப்பதிந்து தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
பால்ய திருமணம் - 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

பால்ய திருமணம் - 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

January 24, 2021 Naren Dran
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த விருதம்பட்டு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து பர்மிட் இல்லாமல் வந்த இரண்டு லாரி பறிமுதல்..

கர்நாடகாவில் இருந்து பர்மிட் இல்லாமல் வந்த இரண்டு லாரி பறிமுதல்..

January 24, 2021 Naren Dran
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக லாரிகள் பர்மிட் இல்லாமல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை செட்டி தாங்கள் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை செட்டி தாங்கள் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழப்பு

January 24, 2021 Naren Dran
ராணிப்பேட்டை அடுத்த செட்டி தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(21). இவருக்குச் சொந்தமாக மூன்று மாடுகள் உள்ளன. அந்த மாடுகள் அருகில் உள்ள ஏரியில் விட்டு மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளில் இரண்டு மட்டுமே வீட்டுக்கு வந்தன. ஒருமாடு வரவில்லை குமார் அவரது தம்பி பாபு (16) என்பவரும் சேர்ந்து மாடு தேடிச் சென்றனர் அப்போது ஏரி அருகே சென்றபோது மின்சாரம் தாக்கிக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் பிணத்தைப் பார்த்துக் கதறி அழுதனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று குமாரின் பிரேதத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரத்தினகிரி முருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

ரத்தினகிரி முருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

January 24, 2021 Naren Dran
ராணிப்பேட்டை: ரத்தினகிரி முருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆற்காடு அடுத்த ரத்தனகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தை கிருத்திகையையொட்டி  முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் பழமையானது, இக்கோயிலின் தை கிருத்திகையையொட்டி வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தை கிருத்திகையையொட்டி சிவ காளி திருக்கோயிலை சேர்ந்த மோகனந்து சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானை வழிபட்டனர்.
வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

January 23, 2021 Naren Dran
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் மேல் பள்ள தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராம்குமார் (35) என்பவர் கடந்த 2016  ல் புத்துகோவில் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான  சந்தோஷ்,மோகன் ,சரவணன்  ஆகிய மூவருக்கும் 7 லட்சம் கடன் கொடுத்ததை திருப்பிக் கேட்டபோது பணத்தை வாங்கியவர்கள்( நண்பர்கள் )  மிரட்டியதாகக் கடிதம் எழுதி வைத்து வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.   எல்லை பிரச்சினையால் இரு மாநில காவல்துறையினர் சடலத்தை மீட்க  வராததால் 16 மணி நேரம் காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
வேலூர் சத்துவாச்சரியில் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

வேலூர் சத்துவாச்சரியில் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

January 23, 2021 Naren Dran
மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு  வேலூர் சத்துவாச்சரியில் மூதாட்டியிடம் 5 சவரன் செயினை மர்ம ஆசாமி பறித்து சென்றார். வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா ( 70 ) . இவர் நேற்று காலை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது , அவரை பின்தொடர்ந்து பைக்கில் ஹெல்மேட் அணிந்துக்கொண்டு வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென மல்லிகாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா கூச்சலிட்டார் . இருப்பினும் மர்ம ஆசாமி மாயமாகிவிட்டார் .  இது குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
விரட்டி , விரட்டி கடிக்கும் வெறிநாய்கள் அச்சத்தில் ராணிப்பேட்டை மக்கள்

விரட்டி , விரட்டி கடிக்கும் வெறிநாய்கள் அச்சத்தில் ராணிப்பேட்டை மக்கள்

January 23, 2021 Naren Dran
ராணிப்பேட்டையில் வீதிகள் தோறும் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். ராணிப்பேட்டை நகரத்தில் தெருக்கு தெரு நாய்கள் உள்ளன. தெருவில் சுற்றித்திரியும் இந்த நாய்கள் கிடைத்த உணவை சாப்பிடுகின்றன . ஓட்டல்கள் , கோழி இறைச்சி கடைகளின்கழிவுகளை சாப்பிட்டு கொழுத்து திரிகின்றன. இதில் கோழிக்கழிவுகளை தொடர்ந்து சாப்பிடும் நாய்களில் சிலவற்ற்றுக்கு சொறி பிடிக்கிறது. இதனால் நகரத்தில் பல இடங்களில் நடந்து செல்வோர் , சைக்கிள் , பைக்கில் செல்வோரை வெறிநாய்கள் துரத்திச்சென்று கடித்து குதறுவது வாடிக்கையாகி விட்டது . கடந்த நவம்பர் மாதம் ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துகுதறியது. இதில் பாதிக்கப்பட்ட முதியவர் பன்னீர்செல்வம் என்பவர் இன்னும் பூரண குணமாகாமால் கையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராணிப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ஒருவரை நாய் கடித்து அவர் சிகிச்சையில் இருக்கிறார். இப்படியாக நகரத்தில் நாய்கள் தொல்லை தாங்கமுடியாத அளவில் இருக்கிறது . இதுகுறித்து நகராட்சி கமிஷனரிடம் கேட்டதற்கு நாய்களை பிடித்து கருத்தடை செய்வற்கு டெண்டர் கோரியுள்ளோம் ...