வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்து வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த விருதம்பட்டு போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.