கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம் அல்லாத சிலிண்டருக்கான இந்த விலை உயர்வு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து சென்னையில் இன்று 14கி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.785ஆக அதிகரித்துள்ளது.