ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பைத் தடை செய்ய ஆலோசனை செய்து வருகிறது.
இதேவேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்திய மக்களுக்காக வெறும் 7 லட்சம் ரூபாயில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் மாருதி சுசூகி நிறுவனம், தனது வெற்றிகரமான பிராண்டான வேகன்ஆர் பிராண்டின் கீழ் புதிதாக எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கார் வெறும் 6 மணிநேரத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றும் திறன் வாய்ந்து உள்ளதாகவும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையில் செல்லும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றும் தெரிவருகிறது.