ராணிப்பேட்டையில் குடியரசு தின விழா நடைபெற உள்ள இடத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிலஸ்டின் புஷ்பராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர், 
இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பாக்கியநாதன் மற்றும் ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பந்தல் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் கோரான தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு விழாவின் ஏற்பாடு செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன.