ராணிபேட்டை: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஷ்டன் புஷ்பராஜ் திடீரென வந்து மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அறைகள் தூய்மையாக உள்ளதா மற்றும் நோயாளிகளுக்கு முறையாக மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா? எனச் சிகிச்சை பெற்று வருபவர்கலிடம் நேரடியாகக் கேட்டரிந்தார்.
மேலும் மருத்துவ மனையில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மையாக உள்ளதா எனப் பார்வையிட்டார். அரக்கோணம் அரசு மருத்துவர் நிவேதிதா சங்கர் உடன் இருந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் குட்டை போலத் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தி செய்து மேலும் அதில் பல நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆட்சியர் உடனடியாக நகராட்சி நிர்வாகத்தை அழைத்துத் தேங்கிய கழிவு நீர் அகற்ற ஆணையிட்டார்.அதன்படி தூய்மை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய கழிவு நீரை அகற்றினர்.