ராணிபேட்டை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் புதியதாக இரயில்வே நிலையம் ஏற்கனவே இருப்பதை விடப் பெரியதாக விரிவாக்கம் செய்யப்பட்டு அதர்குண்டான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் கொட்டப்படும் ஜல்லிகர்கலை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயிலின் 4ஆவது பெட்டி திடீரென அரக்கோணம் புது ரயில் நிலைதில் வரும்போது தடம் புரண்டது.
இதனால் அதிஷ்டவசமாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள், பொறியாளர்கள் வந்து அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.