ராணிப்பேட்டை மாவட்ட எஸ் பியாக இருந்த மயில்வாகனன் கோவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் . அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சிவக்குமார் நியமிக்கப்பட்டார் . தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் மாலை எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார் .
அவருக்கு டிஎஸ்பி பூரணி , இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் . தொடர்ந்து புதிய எஸ்பி சிவக் குமார் நிருபர்களிடம் கூறுகையில் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலின்போது , எந்தவித அசம்பாவிதமும் , குற்றச் செயல்களும் ஈடுபடாத வகையில் விழிப்புடன் செயல்படுவது முதல் பணி .
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் , ஒழுங்கு , போக்குவரத்து , பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் . சாராயத்தை ஒழிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடுவேன் . குற்றச்செயல்களை தடுக்க போலீசாரின் இரவு ரோந்து பணி முடுக்கி விடப்படும் . என்றார் . முன்னதாக எஸ்பி சிவக்குமாரை , மயில்வாகனன் வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார் .