வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மகாதேவ மலையில் உள்ள சிவன் கோயிலில் காமெடி நடிகர் செந்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு தரிசனம் செய்தார்.
அடையாளம் தெரியாதவாறு காவி வேட்டி தலைப்பாகை கட்டி அணிந்தபடி வந்திருந்த அவரைப் பொதுமக்கள் சித்தரிடம் ஆசி பெற்றபோது கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
வேலூரையடுத்த காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மகா-தேவமலை இருக்கிறது. இந்த மலையின் குகையில் சாமியார் ஒருவர் இருக்கிறார். 30 வருடங்களாக மலையின் குகைக்குள் இருந்த இச்சாமியார், அய்ந்து ஆண்டு-களுக்கு முன்பாக வெளிச்சத்துக்கு வந்தார்