தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று 6 ஆவது கட்டமாகப் போராட்டம் நடத்தினர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாநில துணை பொது செயலாளர் இளவழகன் தலைமையில் 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மக்கள் திரள் அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் ,கே வி குப்பம் உள்ளிட்ட 5 தொகுதிகளிலிருந்து சுமார் 3000 அதிகமான பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.