திருப்பத்தூா்: ஓடும் ரயிலில் 20 பவுன் நகை திருடிய வடமாநில இளைஞரைப் போலீசார் கைது செய்தனா்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2ஆவது நடைமேடையில் ரயில்வே காவல் ஆய்வாளா் சபரிநாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், அவா் உத்தரப் பிரதேச மாநிலம் பலராமபூா் பகுதியைச் சோ்ந்த ஷகில் அகமது (21) என்பதும், இவா் மங்களூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் பயணித்த ஆந்திரத்தைச் சோ்ந்த ரத்னா காா்ஸ் ஷா்மா (56) என்பவரிடமிருந்து 20 பவுன் நகையைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஷகில் அகமதுவிடமிருந்து 20 பவுன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.