வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தரப்பில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


 ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள், பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் கிடைக்கப் பெற்ற தனியார் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்ததில் அதிமுகவினருக்கு சொந்தமான சுமார் 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக வேட்பாளரின் துண்டுபிரசுரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் அடங்கிய பூத் ஸ்லிப் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.