ஜன .29 : குடியாத்தம் அருகே ராணுவவீரர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார் . குடியாத்தம் அடுத்த கிருஷ்ணம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி ( 50 ) , ராணுவத்தில் பணியாற்றிவந்தார் , இவரது மனைவி நிலாவேணி . இவர்களுக்கு 2 மகள் , ஒரு மகன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் முனுசாமி , சொந்த கிராமத்திற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது . அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முனுசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முனு சாமிவரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் . பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.