முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு இருசக்கர வாகனத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.