ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த இராமாபுரம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அடுத்த வலர்புரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த குமார்(33) என்பவர் கூலி விலைசெய்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த லாரி இவர்மீது மோதியதில் பலத்த காயமடைந்த வசந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் லாரி ஓட்டுனர் தப்பி ஓடினார்.