ராணிப்பேட்டை: சிப்காட் நவ சபரி ஐயப்பன் கோயில் 10ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறப்பு 18 ஆம் படி பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீ நவ சபரி நகரில் அமைந்துள்ள நவ சபரி ஐயப்பன் கோயிலின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா சபரிமலை தலைமை தந்திரி பிரம்ம ஸ்ரீ கண்டாரு மகேஸ்வரரு தந்திரியின் அருளாசியுடன் கோயில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் 2ஆம் நாள் சனிக்கிழமை ஸ்ரீ பூத பலி உற்சவம் நவ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று கணபதி ஹோமம் உஷ பூஜை,கலச பூஜை,கலப பூஜை, கலச பூஜை கலசாபிஷேகம் உச்ச பூஜை மாலை ஐந்து முப்பது மணிக்குச் சிறப்பு 18ஆம் படி பூஜை மகா தீபாராதனை இரவு 7 மணிக்குக் கலைமாமணி வீரமணி ராஜுவின் இன்னிசை நிகழ்ச்சி அன்னதானம் நடைபெற்றது.