ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகில் அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஏர் ஆரன் களை பஸ்களிலும், ஆட்டோ, கார், வேன் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் பொருத்தி பொதுமக்களை பதற வைக்கும் ஹரன்களை, ராணிபேட்டை மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வாக்னத்திலிருந்து நீக்கி, அபராதமும் வசூல் செய்தனர்.
பொதுமக்களின்் கோரிக்கையாக இரண்டு சக்கர வாகனங்களில் கண் கூசும் அளவிற்கு அதிக வெளிச்சத்தில் உமிழும் முகப்பு விளக்கினை நீக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.