ராணிப்பேட்டை , வாலாஜா பெல்லியப்பா நகரில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது . கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதத்திற்கும் மேலாக பள்ளி மூடப்பட்டுள்ளது . ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வகுப்பறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது . இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பள்ளி ஆசிரியை , ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் . அதன்பேரில் நிலைய அலுவலர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர் . 

பின்னர் அதை அம்மூர் காப்புகாட்டில் பாதுகாப்பாக விட்டனர் .