ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை மற்றும் நிதி உதவி பெறும் ஸ்ரீகிருஷ்ணா வித்யாலயா நடுநிலைப்பள்ளி சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம், மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன. மேலும், மரம் நடுவோம், மழை பெறுவோம்; நீா் மேலாண்மை; காற்று மாசைத் தவிா்ப்போம் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினாா். அறக்கட்டளைச் செயலாளரும், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவருமான எம். சிவலிங்கம் தொடக்க உரையாற்றினாா். பள்ளித் தலைமையாசிரியா் ஜெயஸ்ரீ கோதை வரவேற்றாா்.
விழாவில் ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ்.எம்.சுகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், ஏழைகளுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினாா்.
இதில் முதலியாா் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் தியாகராஜன், மகாத்மா காந்தி சேவா சங்கத் தலைவா் கிருஷ்ணன், ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன், அறக்கட்டளை உறுப்பினா்கள் ஜே.பாலு, தனஞ்செழியன், அப்பு உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா். முடிவில் அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல் நன்றி கூறி, மாணவ, மாணவியா்களுக்கு எழுதுபொருள்கள், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினாா்.