அஞ்சலக சேமிப்பு முகாம் :
வாலாஜாவில் அஞ்சல் சேமிப்பு கணக்கு , அஞ்சல் ஆயுள் காப்பீடு சேமிப்பு முகாம் நேற்று நடந்தது .
ராணிப்பேட்டை உட்கோட்ட அஞ்சல் துணை கண்காணிப்பாளர் முரளி வரவேற்றார் . முகாமில் , அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கரன் கலந்துகொண்டு பேசுகையில் , அஞ்சலக சேமிப்பு கணக்கு மிகவும் எளிமையான முறையில் தொடங்க முடியும் . இந்த சேமிப்பு கணக்கு மூலமாக விபத்து மற்றும் உயிர் காப்பீடு திட்டத்திலும் இணைக்கப்படும் . இதேபோல் கிராமப்புற அஞ்சல் காப்பீடு திட்டம் மிகக்குறைந்த பிரீமியத்தில் அதிக போனஸ் வழங்கக் கூடிய காப்பீடு திட்டமாகும். அனைத்து கிராமங்களில் உள்ள அஞ்சலகத்திலும் இந்த திட்டங்களில் சேரலாம். பொதுமக்கள் இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
முன்னதாக சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு அதிகளவில் தொடங்கிய அஞ்சலக ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் , பரிசுகளும் வழங்கப்பட்டது.