தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வேலூர் மண்டலம் சார்பில் ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி துணை மேலாளர் தொழில்நுட்பம் நடேசன் துணை மேலாளர் வணிகம் பொண்ணு பாண்டி கிளை மேலாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு கண்காட்சி வாகனத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்தார் மேலும் இதில் டிஎஸ்பி பூரணி போக்குவரத்து துறை ஆய்வாளர் முருகேசன் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா வட்டாட்சியர்கள் பாக்கியநாதன் காமாட்சி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.