ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிக்க வைத்து உரையாற்றினர்.
நாட்டில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அனைத்து மிதமான ஏற்றத்தாழ்வுகள்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பெண் குழந்தைகள்மீது அனைத்து பெற்றோர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் பாலின விகிதத்தில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக்கூடிய கண்களைப் பாதுகாக்க வேண்டும் பெண்கள் அனைவரும் சமுதாயத்தில் ஏற்படும் இடர்பாடுகளைத் தகர்த்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினாள் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும். சமுதாயத்தில் குடும்பத்தைத் தேடுதல் அன்பு பாசம் பேச்சுத்திறன் சகிப்புத்தன்மை உள்ளிட்ட குணாதிசயங்கள் அனைத்தும் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம் கல்வி அறிவு இல்லாத பெண் களர் நிலம் போன்றவன் என்பதால் பெண்களுக்குக் கல்வியறிவு என்பது மிகவும் அவசியமானது.
இதைத்தொடர்ந்து, தேசிய பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள்மூலம் ஏற்பாடு செய்திருந்த கண் காட்சிகளையும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் கோமதி சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் பலர் கலந்துகொண்டனர்.