வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்காவிற்குட்பட்ட திருவலம் பகுதியில் பஜார் தெருவில் வசித்து வருபவர் 63வயதுடைய பக்தவச்சலம்.இவரது மகன் 33 வயதுடைய ஜனார்தனன். செம்பராயனல்லூர் பகுதியில் உள்ள பக்தவச்சலம் என்பவரின் நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் மணி என்ற் இருவருக்கும் நிகத்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த பாபு மற்றும். மணி ஆகிய இருவரும் பக்தவச்சலம் என்பவரை அவ்தூறாகத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு,அருகில் இருந்த மண் வெட்டியை கொண்டு பக்தவச்சலத்தின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பக்தவச்சலம் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் மகனான ஜனார்தனன் திருவலம் காவல் நிலையத்தில் தனது தந்தையை தாக்கியது குறித்து பாபு மற்றும் மணிமீது புகார் அளித்துள்ளார். மேலும் புகாரின் பேரில் திருவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.