வாலாஜாவில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மஹா சுதர்சன யாகம் நடைபெற்றது.
வாலாஜா வரதராஜ பெருமாள் கோயிலில் மஹா சுதர்சன யாகம் நேற்று முன்தினம் நடந்தது . வாலாஜாவில் 2,400 ஆண்டு கால பழமையான ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.
சங்கீத மும்மூர்த்திகளில் முதன் மையானவரான தியாகராஜ சுவாமிகள் இந்த கோயிலுக்கு வந்து ஆறுநாட்கள் தங்கி பெருமாளுக்கு பூஜை செய்துள்ளார் . இதேபோல் தியாகராஜ சுவாமிகளின் பிரதான சீடர் வெங்கட்ரமண பாகவதர் இந்த கோயிலில் உள்ள பெருமாள் மீது பலகீர்த்தனைகள் பாடியுள்ளார் . இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த கோயிலில் தைத்திருவோண திருவிழாவை முன்னிட்டு 18 ம் ஆண்டு ஸ்ரீமஹா சுதர்சன யாகம் நேற்று முன்தினம் நடந்தது .
காலை பகவத் திருவாராதனம் , விஷ்வக்ஸேன ஆராதனம் , பஞ்ச ஸூக்த பாராயணம் ஆகியவை நடந்தது . பின்னர் ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம் நடந்தது . இதில் 108 மூலிகை திரவியங்கள் , பழம் மற்றும் புஷ்ப வகைகள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பெரு மாளுக்கு அலங்காரமும் , விசேஷ தீபாராதனையும் நடந்தது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .