ராணிப்பேட்டையில் வரும் 28ம் தேதி பசுமை மாரத்தான் 20 21 போட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் நோக்கில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இயற்கை சீற்றங்கள் பெருகி வரும் தருணத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அவசியத்தை உணர்த்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை வரும் 28ஆம் தேதி நடத்த உள்ளனர்.

இதில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களுக்கான 15 கிமீ 10 கிமீ மற்றும் 5 கிமீ ஓட்டங்களாக இப்போட்டி நடைபெற உள்ளது உலக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் அனைவரும் பெரும் திரளாகப் பங்கேற்று உயிர் வளங்களையும் நம் உலகையும் பாதுகாக்க உறுதி ஏற்க மாவட்ட காவல்துறை அழைக்கிறது.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டணமாக ரூ,400 ஐ https // www.town script.com/e/copy - of- police public greenmarathan 2021 -424020 என்ற இணையதள முகவரி மூலமாகவும் நேரடியாக ஆற்காடு வாலாஜா ராணிப்பேட்டை ஆகிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கட்டண மையங்களில் நேரடியாகவும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக டி-ஷர்ட் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.4.6 லட்சம் வரையிலான பரிசுகள் ஓட்டத்தில் இலக்கை அடிப்பவர்களுக்கு பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு 9944134770,7070975765,8682906247 ஆகிய எங்களில் தொடர்பு கொள்ளலாம்