ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொண்ணமங்கலம், கன்னிகாபுரம், ஆரூர் ஆகிய இடங்களில் பனைமரம், ஈச்சமரம், தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்ேபடுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பூர்ணிமா தலைமையில், கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உஷா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 35 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலையில் பொண்ணமங்கலம், கன்னிகாபுரம், ஆரூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப்பகுதியில் பனைமரத்தில் கட்டப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட கள்பானைகளை உடைத்தனர். இதன் மூலம் 120 லிட்டர் கள் அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக பழனி, எல்லம்மாள், ஜோதி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.