குறள் : 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மு.வ உரை :
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம் புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
கலைஞர் உரை :
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
Kural 273
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram
Puliyindhol Porththumeyn Thatru
Explanation :
The assumed appearance of power by a man who has no power (to restrain his senses and perform austerity) is like a cow feeding on grass covered with a tigers skin
இன்றைய பஞ்சாங்கம்
04-02-2021, தை 22, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 12.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 04.02.2021
மேஷம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் நிறைவேறும். வேலையில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.
கன்னி
இன்று உங்களின் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.
கும்பம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
மீனம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,