குறள் : 294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
மு.வ உரை :
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
கலைஞர் உரை :
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
Kural 294
Ullaththaar Poiyaa Thozhukin Ulakaththaar
Ullaththu Lellaam Ulan
Explanation :
He who in his conduct preserves a mind free from deceit will dwell in the minds of all men
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
25-02-2021, மாசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூசம் நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஸ்ரீநடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். நவகிரக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 25.02.2021
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.
மகரம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.
மீனம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.