குறள் : 283
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

மு.வ உரை :
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

கலைஞர் உரை :
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை :
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

Kural 283
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum

Explanation :
The property which is acquired by fraud will entirely perish even while it seems to increase



இன்றைய பஞ்சாங்கம்
14-02-2021, மாசி 02, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 04.32 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் மாலை 04.32 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. 

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00, 
இன்றைய ராசிப்பலன் - 14.02.2021

மேஷம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தில் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும். 

கடகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 10.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு தடைகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். 

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. 

கன்னி
இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் லாபங்களை அடைய முடியும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். 

தனுசு
இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்-கு வந்து சேரும்.

மகரம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.

மீனம்
இன்று உடன் பிறந்தவர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். செலவுகள் குறையும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,