குறள் : 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
மு.வ உரை :
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
கலைஞர் உரை :
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை :
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
Kural 280
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin
Explanation :
There is no need of a shaven crown nor of tangled hair if a man abstain from those deeds which the wise have condemned
இன்றைய பஞ்சாங்கம்
11-02-2021, தை 29, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ தை அமாவாசை. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 11.02.2021
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
தனுசு
இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.
மீனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,