வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நபர்களை அந்த வழியே சென்ற வேலூர் வடக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகுமார் விசாரித்துள்ளார்.

சரிவர பதில் தெரிவிக்காமல் முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திடீரென இரு நபர்களும் காவலர் விஜயகுமாரை கை மற்றும் அருகில் இருந்த செங்கல்லால்  தாக்கி தப்பி ஓடி உள்ளனர். இதில் காவலருக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் நிலைய எஸ் ஐ ராஜசேகர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தாக்கிய நபர்கள்குறித்து விசாரித்து தேடிவந்தனர்.

இந்த நிலையில்  காவலரை தாக்கியது தொடர்பாக தோட்டப்பாளையத்தை சேர்ந்த  அருண்குமார்(23), ஸ்டிபன்ராஜ்(24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.