சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சசிகலா நல்ல உடல் நிலையில் இருக்கிறார். சிறைத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாக தகவல் அளிக்கப்பட்டது. சசிகலாவுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.