ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு ராணிப்பேட்டை சோளிங்கர் அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருத்தப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
பட்டியலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு கிளாட்சன் புஷ்பராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார். அதன்படி மொத்தம் 10,27,804 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 5,00,626, பெண் வாக்காளர்கள் 5,27,127, மூன்றாம் பாலினத்தவர்கள் 51ஆக உள்ளனர்.