ராணிப்பேட்டை: ஆயுதப்படை தலைமையகத்தில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மற்றும் இந்து மதம் ஆகிய மதங்களின் பிரமுகர்கள் மற்றும் மதபோதகர்கள் கலந்துகொண்டு பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
இந்த சமத்துவ பொங்கல் ராணிப்பேட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்