ராணிப்பேட்டை: சட்டவிரோதமாக மண் அள்ளிய வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள செல்லாத்தம்மன் குலக்கரை அருகில் உள்ள ஓடையில் பனப்பாக்கம் சின்னதெரு காலணியைச் சேர்ந்த சேட்டு (45) என்பவர் தனது மாட்டு வண்டியில் கள்ளத்தனமாக மொரம்பு மண்ணை எடுத்துச் செல்லும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெமிலி காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்தார்.

மேலும் அவர்மீது வழக்குப் பதிவு செய்து வண்டியைப் பறிமுதல் செய்தனர்.