ராணிப்பேட்டை முத்துகடை எம்பிடி ரோட்டில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துகடை அடுத்து எம்பிடி சலையில் சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பதின மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மின்கம்பம் கவிழ்ந்ததை அடுத்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.