ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அறுகே உள்ள பெண் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், வயது இருபத்தாறு இவர் சென்னையில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்காக இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் கலவை பகுதிக்கு வந்துள்ளார், வந்தடைந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் ஊர் பொதுமக்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கலவை ஆய்வாளர் மங்கையர்கரசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவதில் பெயரில் கலைந்து சென்றனர்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.