வாலாஜா காந்தி பூங்காவில் பழுதடைந்த செயற்கை நீரூற்று சீரமைக்கப்படுமா ? 


 

வாலாஜாவில் நகராட்சிக்கு சொந்த மான மகாத்மா காந்தி பூங்கா உள்ளது . கடந்த 1947 ம் ஆண்டு மகாத்மா காந்தி பெங்களூரு செல்லும் வழியில் வாலாஜவிற்கு வருகைதந்தார் . அப்போது அங்கு கூடியிருந்த திரளான பொது மக்களிடம் பேசினார் . அவரது நினைவாக இந்த பூங்கா அமைக்கப்பட்டது. 

இதில் செயற்கை நீரூற்று பொதுமக்கள் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது . தற்போது இந்த செயற்கை நீரூற்று செயல்படாமல் உள்ளது . இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆகவே செயற்கை நீரூற்றை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது .