வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்கே முரளி, மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தை மாவட்டச்செயலாளர் நல்லூர் எஸ் பி சண்முகம் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இதில் அ.ம.கிருஷ்ணன் , SSS நடராஜன் மோகன்தாஸ் ஆறுமுகம் நகர செயலாளர்கள் பழனிவேல் ஞானசேகர் அறிவுச்சுடர் சிறுபான்மை பிரிவு சித்திக் பாஷா தாழனூர் சுகுமார் சமூக நீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் ஆ ஜானகிராமன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க தலைவர் தீனதயாலன், சயன புரம் சாந்தி திருமால் ஆகியோர் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டது. நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் முதியவர்கள் ஆண்கள் என ஏராளமானோருடன் அந்தந்த பகுதி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.