ராணிப்பேட்டை : காரை கூட்டு சாலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்புர் பகுதியில் பழைய ரயில்வே பாலம் உள்ளது இந்த ரயில்வே பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று போடப்பட்டது நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை திமுக மாவட்ட கழகச் செயலாளருமான ஆர் காந்தி மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 30 மாதங்கள் நடைபெறும் இந்தப் பணியானது விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்