ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் சிறந்த ஆட்டோ ஓட்டுனருக்கு டிஎஸ்பி சீருடை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று முதல் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் வாலாஜா ஆற்காடு முத்துக்கடை ராஜேஸ்வரி திரையரங்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு டிஎஸ்பி பூரணி ஆட்டோ ஓட்டுனர் சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.