வாணியம்பாடியில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய உதவி காவல் ஆய்வாளர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சௌந்தர் வயது
-50 ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். வாணியம்பாடி நகர காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல் இன்றும் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பால் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் தனது பணி புரியும் காலங்களில் நல்ல முறையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இச்சம்பவம் வாணியம்பாடியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.