ஆம்பூர் அருகே கார் டயர் வெடித்து பயங்கர விபத்து - பெண் பலி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்துள்ளது. நிலைதடுமாறி சென்ற கார் எதிரில் வந்த மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.