சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வாலாஜாபேட்டையில் இன்று நடைபெற்ற து.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி அருகே சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதனை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் தொடங்கி வைத்தனர், இந்த பேரணியில் ஏராளமான பெண் காவலர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் ஹெல்மெட் அணிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்